என்னுடைய பெயர் சாந்தி, சென்னை, வேளச்சேரி, நேருநகரில் இஸ்திரி கடை வைத்திருக்கிறேன். நான் கடை வைத்திருக்கும் அதே கட்டிடத்திலுள்ள ஒரு வீட்டிற்கு புதிதாக திருமணம் செய்த தம்பதிகள் குடியேறி வந்தனர்.
அவர்கள் அங்கு வந்த நாள் முதல் துணியை இஸ்திரி போட என்னிடம் தான் கொடுப்பார்கள். அவருடைய பெயரென்ன, அவர் என்ன வேலைப் பார்க்கிறார் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. அவர் எப்போதும் என்னை ‘அக்கா’ என்று தான் கூப்பிடுவார். அவர் எப்போது என்னை பார்த்தாலும் முகமலர்ந்து புன்னகைப்பார். அதனால் நானும் அவ்விதமே நடந்து கொள்வேன். இது தவிர அவர் என்னிடம் எதுவும் பேச மாட்டார்.
அப்படி ஒரு நாள், அவர் என்னைப் பார்க்கும் போது என் முகத்தில் சிரிப்பு இல்லை, இயல்புக்கு மாறாக நான் கவலையோடு கண்கலங்கி இருந்தேன். அவர், அப்போது தான் முதன் முறையாக, ‘என்னக்கா பிரச்னை உங்களுக்கு, ரொம்ப கவலையா இருக்கீங்க?’ என்று கேட்டார், ‘அதெல்லாம் ஒன்றுமில்லை’ என்று சமாளித்தேன். ஆனால் அவர் என்னை விடவில்லை. ‘என்னை உங்கள் தம்பியாக நினைத்துச் சொல்லுங்கள், என்ன நடந்தது!’ என்று மீண்டும் கேட்டார். ‘சரி, போப்பா.. நான் வீட்டிற்கு வந்து சொல்கிறேன், கடையில் வேண்டாம்’ என்று சொல்லி அனுப்பினேன்.
பிறகு நான் அவர் வீட்டிற்குச் சென்று, ‘என் மகள் பவானிக்கு திருமணம் முடிவாகி, அடுத்த இரண்டு வாரங்களில் திருமணம். எல்லோருக்கும் திருமண அழைப்பிதழ் கொடுத்துவிட்டோம். ஆனால், இப்போது அந்த மாப்பிள்ளை, ‘எனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை, பவானியை நான் கட்டிக்க மாட்டேன்’ என்கிறான். என்ன செய்வது என்றே தெரியவில்லை.’ என்று சொல்லும் போதே என் கண்ணில் மளமளவென்று கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது.
இதைக் கேட்ட அவர், ‘அட போங்கக்கா… இதுக்கா வருத்தப்படுறீங்க… அப்படியெல்லாம் எதுவும் நடக்காது, உங்க மகள் பவானிக்கு குறித்த நேரத்தில் அந்தப் பையனுடன் தான் கல்யாணம் நடக்கும். கவலைப் பட வேண்டாம்! நான் பார்த்துக் கொள்கிறேன்.’ என்று கூறி, சில பொருட்களை வாங்கிட்டு வரும்படி சொன்னார்.
உண்மையில் அந்த நேரம் அவர், ‘என்ன சொல்கிறார், என்ன செய்யப் போகிறார்’ என்று எனக்கு எதுவுமே புரியவில்லை. இருந்தாலும் ‘சரி’ என்று கூறி அவர் சொன்ன எல்லாவற்றையும் வாங்கிட்டு வந்து கொடுத்து விட்டேன்.
அடுத்த நாள் காலை அவர் என்னை அழைத்து, நான் வாங்கிட்டு வந்து கொடுத்த பொருள்கள் அனைத்தையும் என்னிடம் கொடுத்து, ‘இதை இதை இந்தந்த மாதிரி செய்ய வேண்டும்’ என்று சில முறைகளை கூறினார். அப்போது தான் எனக்குப் புரிந்தது; ‘அவர் ஏதோ மாந்திரீகம் செய்து அந்தப் பையனின் மனதை மாற்ற முயற்சி செய்கிறார்’ என்று. அவர் சொன்ன முறை பிரகாரம் எல்லாவற்றையும் செய்தேன்.
என்ன ஆச்சரியம், இதையெல்லாம் செய்து முடித்த நான்காம் நாள் அவன் என் மகளை மணந்து கொள்ள சம்மதித்து விட்டான். அவன் முழுவதுமாக மனம் மாறிவிட்டான். உண்மையில் எனக்கு சந்தோஷம் தாங்கல…இந்த அதிசயம் அங்குள்ள சிலருக்கும் பரவியதால் அவர்களும் தங்களின் குறைகளைத் தீர்க்க அவரை நாடி வர ஆரம்பித்தனர்.
அவர் மீது எனக்கு இருந்த அன்பு இப்போது மரியாதையாக மாறிவிட்டது. என் மகளின் திருமணத்தை நல்லபடி நடத்தி முடித்தோம். அவர்கள் சந்தோஷமாக வாழ்கிறார்கள். இதில் பெரிய ஆச்சரியம் என்னவெனில், நான் இருந்த சூழ்நிலையில் அவர் என்னிடம் இந்த வேலைக்காக எவ்வளவு பணம் கேட்டிருந்தாலும் வட்டிக்கு வாங்கியாவது கொடுத்திருப்பேன். ஆனால், இவ்வளவு பெரிய நன்மையை செய்த அவர், என்னிடம் பத்து ரூபாய் கூட பணம் கேட்கவில்லை, வாங்கவில்லை என்பது தான்.
ஒரு வேளை, எனக்கு நன்மை செய்யத்தான் கடவுள் அவரை நான் இருக்கும் அதே இடத்திற்கு வரவழைத்திருப்பாரோ என்றும் எண்ணத்தோன்றுகிறது. இக்காலத்தில் இப்படிப்பட்ட மனிதர்களைப் பார்ப்பதே அபூர்வம். என் வாழ்க்கையில் மறக்கமுடியாத நபர் அவர்.
சாந்தி-வேளச்சேரி
Mobile: 8778039412