என்னுடைய பெயர் சமீர், வயது 23, என்னுடைய சொந்த ஊர் பாலக்காடு. தற்போது சென்னை வில்லிவாக்கத்தில் ஒரு சோஃபா கடையில் பணிபுரிகிறேன்.

அண்மையில் ஊரிலிருந்து என் குடும்பத்தார் சென்னைக்கு வந்த சமயம், நாங்கள் எல்லோரும் சேர்ந்து சில  பொருட்கள் வாங்க சென்னை புரசைவாக்கம் சென்றோம். அங்கு ஒரு துணிக்கடையில் இருக்கும்போது கூட்ட நெரிசலில் எங்களுடன் வந்திருந்த வயதான என்னுடைய வாப்பா காணாமல் போய் விட்டார். அவருக்கு பார்வையும் நினைவாற்றலும் குறைவு மட்டுமின்றி தமிழும் அவருக்குத் தெரியாது என்பதால் அவரால் எங்களைத் தேடி பிடிக்க முடியாது. எங்களால் முடிந்த அளவு அங்கு அலைந்து திரிந்து அவரைத் தேடிப் பார்த்தும் கண்டு பிடிக்க முடியவில்லை. என்ன செய்வதறியாது என்று குழம்பி இருக்கும்போது தான் என்னுடன் பணி புரியும் நண்பர், அப்துர் ரஹ்மான் என்பவர், ‘கவலைப் படாதே தம்பி! அப்பாவை கண்டு பிடித்து விடலாம்’. என்று சொன்னார்.

அதன் பிறகு அவர் பெரம்பூரில் இருக்கும் காதிரிய்யா அலுவலகத்திற்கு என்னை அழைத்து வந்து, நடந்த விசயங்கள் அனைத்தையும் பரீத் உஸ்தாதிடம் கூறினார். அவர் சொன்ன எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுவிட்டு என் தந்தையின் பெயரையும் அவருடைய அம்மாவின் பெயரையும் கேட்டு எழிதிக்கொண்டார். சிறிது நேரத்திற்குப் பிறகு, ‘கவலைப் படாதே தம்பி! உன் வாப்பா கிடைத்துவிடுவார், அவர் இங்கு பக்கத்தில் தான் வழி தெரியாமல் சுற்றிக்கொண்டிருக்கிறார்’ என்று கூறி, ஒரு பொருளை என்னிடம் கொடுத்தார்.

‘இங்கிருந்து புரசைவாக்கம், வேப்பேரி வழியாக சென்ட்ரல் இரயில்வே ஸ்டேஷன் செல்லுங்கள். அங்கிருந்து ரயில் ஏறி, பெரம்பூர் இரயில்வே ஸ்டேஷன் வரவேண்டும். பெரம்பூர் ஸ்டேஷன் வரும் முன்பு இந்தப் பொருளை ஒரு மரத்தில் கட்ட வேண்டும். தாமதிக்காமல் இப்போதே செல்லுங்கள். நான் சொன்னது மாதிரியே செய்யுங்கள்.’ என்று கூறி அனுப்பினார்.

அவ்வாறே புரசைவாக்கம், வேப்பேரி வழியாக சென்ட்ரல் இரயில்வே ஸ்டேஷன் சென்று அங்கு இரயில் ஏறி பெரம்பூர் ஸ்டேஷன் நோக்கி வந்தோம். இதற்கிடையில் உஸ்தாத் மரத்தில் கட்ட சொன்னதை முழுமையாக மறந்து விட்டேன்.

பெரம்பூர் ஸ்டேஷன் வரும் முன்பு கட்ட வேண்டும் என்று அதற்கு முன்புள்ள வியாசர்பாடி-ஜீவா ஸ்டேஷனில் இறங்கி அங்கிருந்த ஒரு மரத்தில் அந்த பொருளைக் கட்டிவிட்டுத் திரும்பும் போது அங்குள்ள பயணிகள் இருக்கையில் என்னுடைய வாப்பா படுத்திருப்பதைப் பார்த்ததும் ஒரு கனம் திகைத்துப் போனேன். அந்த ஆச்சரியத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. என் கண்களில் கண்ணீர் மல்க என் வாப்பாவை ஆரத் தழுவிக் கொண்டேன். வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் அது.

“இனி என்ன செய்வோம் என்று தெரியவில்லை ஆண்டவா!” என்று திகைத்து போய் வழி தெரியாமல் இருக்கும் போது என் தீர்வுக் காண மிகச் சரியாக வழிகாட்டிய என் நண்பர்-அண்ணன் அப்துர் ரஹ்மானை மறக்க முடியாது. காணாமல் போன என் தந்தையை இழந்து என் குடும்பமே தவிக்கும்போது எந்த கைமாறையும் எதிர்பார்க்காமல் உடனே எங்கள் நிலையைப் புரிந்து கொண்டு உதவிய உஸ்தாதை வாழ்நாள் முழுக்க மறக்கவே முடியாது. அவர்களுக்கு என் குடும்பமே நன்றி கடன் பட்டுள்ளது.

சமீர் – பாலக்காடு

Mobile: 9884739201 & 9566296835