என்னுடைய பெயர் ஷப்பீர். என்னுடைய ஊர் கேரளா, பாலக்காடு. தற்போது சென்னை, பெரம்பூரில் வடை வண்டி போட்டு வியாபாரம் செய்து வருகிறேன். ஃபரீத் உஸ்தாத் அவர்கள் அவ்வப்பொழுது என் கடைக்கு வடை வாங்க வருவார்கள். ஒருமுறை ‘தாங்கள் என்ன பணி செய்கிறீர்கள்?’ என்று கேட்டேன். ‘காதிரிய்யா தெய்வீக மையம்’ எனும் பெயரில் ஆன்மிக சிகிச்சை செய்து வருகிறேன்’ எனக் கூறினார்கள்.
எனக்கும் ஒரு பிரச்னை இருக்கிறது ஒரு நாள் உங்களை சந்திக்க வருகிறேன் எனக் கூறினேன். அவ்வாறே ஒரு நாள் அவர்களைச் சந்திக்க சென்றேன். “எனது மச்சான் (தங்கையின் கணவர்) எங்கும் ஒழுங்காக பணி செய்ய முடியவில்லை. அடிக்கடி அவருக்கு உடல் நலம் சரியில்லாமல் அவதிபடுகிறார்’ என்று கூறி ஏன் அப்படி ஏற்படுகிறது என்று கேட்டேன்.
என் மச்சானின் பெயரையும் தங்கையின் பெயரையும் கேட்டு எழுதிவிட்டு சில நிமிடங்களுக்குப் பிறகு, ‘மச்சானுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை; தங்கைக்குத் தான் மிகக் கடினமாக சூனியம் செய்யப்பட்டுள்ளது’ என்று கூறினார்கள். ஆனால், நான் அதை முழுவதுமாக மறுத்தேன். ‘ஏனெனில், எனக்குத் தெரிந்து தங்கைக்கு எந்தப் பிரச்னையும் இல்லை; மச்சானுக்குத் தான் பிரச்னை’ என்று வாதித்தேன். ‘உங்கள் தங்கைக்குத் தான் பிரச்னை, அதை நான் உறுதி செய்கிறேன். நீங்கள் ஊருக்குச் செல்வதற்கு முன்பு என்னை சந்தித்து விட்டு செல்லுங்கள்’ என்று கூறினார்கள்.
அவ்வாறே என் சொந்த ஊர் கேரளா பாலகாட்டிற்குச் செல்வதற்கு முன்பு அவர்களை வந்து சந்தித்தேன். அப்போது அவர்கள் என்னிடம் ஒரு திரியை கொடுத்து, ‘உங்கள் தங்கை வசிக்கும் பகுதி அல்லாமல், வேறொரு பகுதிக்கு உங்கள் தங்கையை அழைத்து வந்து, பொழுது சாய்ந்ததற்குப் பிறகு உங்கள் தங்கையின் முன்னால் இந்தத்திரியை கொளுத்துங்கள்’ என்று கூறினார்கள்.
அவ்விதமே நான் பயணம் செய்து பாலகாட்டிற்குச் சென்று, என் தங்கையையும் மச்சானையும் அழைத்துக் கொண்டு, கோயம்புத்தூரிலுள்ள எனது உறவினர் வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். உஸ்தாத் சொன்னது மாதிரியே பொழுது சாய்ந்த பிறகு என் தங்கையை எனக்கு முன்னாள் அமர வைத்து, அந்தத் திரியை கொளுத்தினேன். அப்போது என் தங்கையின் நிலை முற்றிலுமாக மாறியது. மிகவும் ஆக்ரோஷமாக சத்தம் போட்டாள். அவள் மீது வேறு யாரோ வந்து பேசுவது மாதிரி தெரிந்தது. ‘தனக்கு சூனியம் செய்ய பட்டிருப்பதாகவும் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும்’ அவள் சொன்னாள். நான் உடனே அங்கிருந்து உஸ்தாதிற்கு போன் செய்து நடந்ததை விவரித்தேன். சற்றும் தாமதிக்காமல் அவர்களை அழைத்துக் கொண்டு சென்னைக்கு வரும்படி உஸ்தாத் கூறினார்கள். அவ்விதமே சென்னைக்கு உடனடியாக வந்து உஸ்தாதை சந்தித்தோம். ‘இனி தாமதித்தால் உயிருக்கே ஆபத்து, உடனடியாக சிகிச்சை செய்தாக வேண்டும்’ என்று என்னிடம் கூறினார்கள். அதற்கு நானும் சம்மதித்தேன்.
அன்று இரவு எங்கள் வீட்டிற்கு இரண்டு ஆலிம்களை அழைத்துக் கொண்டு உஸ்தாத் வந்தார்கள். அகல் விளக்கு ஒன்றை ஏற்றி வைத்து, அதன் முன்பு தங்கையை அமரச் சொன்னார்கள். அவர்களுடன்வந்த இரண்டு ஆலிம்களும் சப்தமாக குர்ஆன் ஓதினார்கள். என் தங்கையின் மனநிலை மாறியது. மீண்டும் ஆக்ரோஷப்பட்டாள். உஸ்தாதை கண்ணிமைக்காமல் கோபமாக பார்த்துக் கொண்டேயிருந்தாள். ‘நீ யார், உன்னை அனுப்பியது யார்’ என்று உஸ்தாத் பல முறை கேட்டும் அவள் பதில் சொல்லாமல் முறைத்துக்கொண்டே இருந்தாள்.
இவ்வாறே மூன்று நாட்கள் கழிந்தன. நான்காம் நாள், என் தங்கையிடம் இருந்த அந்த ஜின் பேசியது. எங்களுக்கு மிகவும் நெருக்கமான உறவினர் ஒருவர், அவர்களின் மகளுக்கு திருமணம் நடக்கும் முன்பாக என் தங்கையின் திருமணம் நடந்து விட்டது என்று எங்கள் மீது பொறாமைக் கொண்டு, பாலகாட்டிலிருக்கும் ஒரு மந்திரவாதியிடம் சென்று என் தங்கையின் மணவாழ்க்கையை நாசமாக்க இந்த ஏவலை அனுப்பியுள்ளார். அது ஏழு வருடங்களாக என் தங்கையின் உடலில் இருந்து அவளுக்கு பல வகையான இடையூறுகளை தந்துள்ளன. ஆனால், இது எதுவுமே எனக்குத் தெரியாது. என் தங்கை இதனால் பல முறை தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்திருக்கிறாள். இவ்வாறு பிரமிப்பான பல தகவல்களை அந்த ஏவல் சொன்னது. ‘என் தங்கையின் உயிரை எடுக்காமல் போகமாட்டேன்’ என்று அடம்பிடித்தது. உஸ்தாத் அவர்களின் மிகப் பெரிய முயற்சியினால், ஏழு நாட்களுக்குப் பிறகு அந்த ஜின் அவள் உடலைவிட்டு வெளியேறியது. அல்ஹம்துலில்லாஹ்!
என்னிடம் பலவகையான பலன்களை அனுபவித்த எங்களின் நம்பிக்கைக்குரிய ஒருவர்தான் இப்படி செய்திருக்கிறார் என்று நினைத்து மிகவும் வேதனைப் பட்டேன். இருப்பினும் அல்லாஹ் அவராகளுக்குரிய தண்டனையைக் கொடுப்பான் என்று நான் பொறுமை காத்தேன்.
‘இனி அவர்கள் பாலகாட்டிற்குச் செல்ல வேண்டாம். உங்களின் பார்வையில் சென்னையிலேயே இருக்கட்டும்’ என்ற உஸ்தாதின் ஆலோசனைப் படி சென்னையில் அவர்களை குடியமர்த்தினேன். மச்சானுக்கும் ஒரு வடை வண்டி போட்டு வியாபாரம் செய்ய ஏற்பாடுகள் செய்தேன். இப்போது தங்கையும் மச்சானும் நிம்மதியாக சந்தோஷமாக பாதுகாப்பாக வாழ்கிறார்கள். எங்களுக்கு கெடுதல் செய்தவர்களுக்கு எங்களின் கண் முன்னே அல்லாஹ் மிகப் பெரிய தண்டனையும் கொடுத்து விட்டான்.
நடந்தவையெல்லாம் ஆச்சரியமாக உள்ளது. தங்கையின் வாழ்க்கையே கேள்விக் குறியான நிலையில் உஸ்தாத் மூலம் அல்லாஹ் எங்களுக்கு அருள் புரிந்தான். நானும் என் குடும்பத்தாரும் உயிருள்ளவரை உஸ்தாத் அவர்களை மறக்கவே மாட்டோம். திருப்பிச் செலுத்த முடியாத நன்றிகடன் பட்டுள்ளோம்.
ஷப்பீர்- பாலக்காடு
Mobile: 8015925367 & 9551447274