என்னுடைய பெயர் அப்துல் ரஜாக், சொந்த ஊர் மதுரை, நெல்பேட்டை சுங்கம் பள்ளிவாசல் ஜமாஅத்.
எங்கள் மஹல்லாவில் ஒவ்வொரு வருடமும் கௌஸ் நாயகத்தின் பேரில் கந்தூரி விழா மிக விமரிசையாக நடைபெறும். அப்போது ஒரு ஆண்டு 11 நாட்கள் தொடர் பயான் நிகழ்ச்சிக்காக சென்னையிலிருந்து ஃபரீத் ஹள்ரத் அவர்களை அழைத்திருந்தோம். ஹள்ரத் அவர்கள் எங்களுடன் இருந்த அந்த 11 நாட்களில் அவர்களின் தனித்துவத்தை பலவகையில் எங்களால் உணர முடிந்தது.
நாங்கள் இரும்புப் பாத்திரங்கள் தயார் செய்து விற்பனை செய்கிறோம். எங்கள் வியாபாரத்தில் பல வகையான நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருந்த நேரம் அது. எங்களின் குடும்பத்தின் மீது அவர்களுக்கு மிகுதியான அக்கறை இருந்தமையால் எங்கள் வியாபாரத்தில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து அவர்களிடம் விரிவாகப் பேசினோம். என்ன செய்வதரியாது என்று குழம்பி இருந்த போது ஹள்ரத் அவர்களின் ஆலோசனைகள் எங்களுக்கு பலமுள்ளதாகவும் பலனுள்ளதாகவும் இருந்தது.
அதனால் சென்னைக்கு சரக்கு வாங்க வரும்போதெல்லாம் அவர்களை சந்தித்து விட்டுச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டேன். இவ்வாறு நாட்கள் நகரும் போது ஒரு நாள் என் பேத்தி மனநலம் பாதிக்கப்பட்டாள். அவளுக்கு இவ்வாறு ஆண்டுக்கு ஒருமுறை மனநலம் பாதிப்பு ஏற்படுவது வழக்கம். இது பற்றி அவர்களிடம் விரிவாகக் கூறினேன்.
என் பேத்திக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உண்டு. அவள் திருமணம் செய்த காலம் முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் வந்து விட்டால் மனநலம் பாதிக்கப்படுவாள். கையில் எது கிடைக்கிறதோ அதைத் தூக்கி எரிந்து எதிரில் இருப்பவர் யார் என்று பாராமல் காயப்படுத்திவிடுவாள். இதனால் வீட்டில் ஒரு அசாதாரண நிலை ஏற்பட்டு எல்லோருடைய நிம்மதியும் கெட்டுப் போய் விடும். ஒருசில தினங்களுக்குப் பிறகு அதுவே தானாக சரியாகிவிடும். அவள் இயல்பு நிலைக்குத் திரும்புவாள். இதற்காக மருத்துவ ரீதியில் எல்லா வகையான முயற்சியும் செய்துவிட்டோம். ஆனால் எவ்வித பயனும் இல்லை.
இவ்வாறு ஹள்ரத் அவர்களிடம் கூறியபோது, நான் உடனே உங்கள் ஊருக்கு வரவேண்டும் என்று கூறி மதுரைக்குப் புறப்பட்டு வந்து சேர்ந்தார்கள். மூன்று நாட்கள் தங்கி இருந்து என் பேத்திக்கு சிகிச்சை செய்தார்கள். இப்போது என் பேத்தி பூரணமாக குணம் அடைந்து விட்டாள். எல்லா புகழும் ஏக இறைவனுக்கே.
இதில் மிகப் பெரிய ஆச்சரியம் என்னவெனில் என் பேத்திக்கு இப்படி ஏற்படக் காரணம் என்னவென்று ஹள்ரத் அவர்கள் மிகத் தெளிவாக கண்டு பிடித்து விட்டார்கள். இராமநாதபுரம் மாவட்டத்தில் பெருங்குளம் என்ற ஒரு ஊரில் தான் என் பேத்திக்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்டது. என் பேத்தியின் கணவர் சிறுவயதிலேயே தந்தையை இழந்தவர். பொருளாதார பின்பலம்இல்லாததால் அவர் மிகச் சிரமத்துடன் கல்விக் கற்று இன்ஜினியர் ஆனார். அவருக்கு உதவி செய்ய அவ்வூரிலுள்ள யாரும் முன் வரவில்லை. இருப்பினும் தன்னைக் கேவலமாகப் பார்க்கும் இவர்களுக்கு முன் நன்கு படித்து முன்னுக்கு வந்து வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற இலட்சியத்தை அவர் வென்றார்.
தனக்கு எந்த வகையிலும் உதவிட முன்வராத இந்த ஊரில் பெண் எடுக்கக் கூடாது என்று அவர் முடிவெடுத்ததால் மதுரையில் எங்கள் குடும்பத்தில் பெண் எடுத்து மண முடித்தார். அவருக்கு ஊரில் முறைப் பெண்கள் இருந்தும் யாரையும் அவர் மண முடிக்க விரும்பவில்லை. அதன் பொறாமையினால் அவர்களில் யாரோ ஒருவர் இந்த திருமணம் நடக்கக் கூடாது என்று எண்ணி என் பேத்திக்கு அவர்கள் சூனியம் செய்துவிட்டார்கள்.
இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்த மாதம் அக்டோபர் மாதம் என்பதால் அதை தடை செய்ய செய்யப்பட்ட செய்வினை ஒவ்வொரு ஆண்டும் சுழச்சியாக அக்டோபர் மாதத்தில் என் பேத்திக்கு அதன் வீரியம் வெளிப்பட்டது. அதனால் என் பேத்தி மிகவும் பாதிக்கப்பட்டாள்.
அவளுக்கு திருமணமாகி அடுத்த வருடம் என் பேத்தியின் கணவருக்கு குவைத்தில் பணி உறுதியானதால் அவர், தன் மனைவி மற்றும் அம்மா இருவரையும் அழைத்துக் கொண்டு குவைத்திற்கு சென்று விட்டார். அங்கு சென்ற நேரம் பார்த்து அக்டோபர் மாதமும் நேரிட்டதும் என் பேத்தியின் மனநலம் பாதிக்கப்பட்டு தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் கணவர் இல்லாத நேரத்தில் தனது மாமியாரைத்தாக்கி, காயப்படுத்தி அது போலீஸ் கேசாகி பிறகு அதிலிருந்து அவளை விடுவிக்கப் பட்டப்பாடு அல்லாஹ்விற்கு தான் தெரியும்….சொல்லி முடியாது…ஆனால், ஹள்ரத் அவர்களின் அபார முயற்சி தனிப்பட்ட கவனம் என் பேத்திக்கு பூரணமாக சுகம் பெற்று அவளுக்கு நல் வாழ்வு கிடைத்து விட்டது.
அவர்கள் என் குடும்பத்திற்காக செய்த பல உதவிகளை காலத்திற்கும் மறக்கவே முடியாது. அவர்களின் துஆ எங்கள் குடும்பத்திற்கு எப்போதும் தேவை.
அப்துல்ரஜாக்-மதுரை
Mobile: 9715608154