என்னுடைய பெயர் ஷீலா வயது 40 பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறேன். நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். எனக்கு மணம் முடித்து கொடுக்கப்பட்ட இடம் தான் பெங்களூர்.

தற்போது நாங்கள் இருக்கும் பகுதிக்கு அருகில் ஒரு காலி மனையை விலைக்கு வாங்யியுள்ளோம். சில தினங்களுக்கு முன்னர் யாரோ சிலர் செய்வினை செய்து அந்தப்  பொருட்களை அந்த காலி மனைக்குள் கொண்டு வந்து போட்டுள்ளனர். புழக்கமில்லாத காலி மனை என்பதால் விடுமுறை நாட்களில் அங்குள்ள பிள்ளைகள் அதனுள் கிரிக்கெட் விளையாடுவர். இதைப் பார்த்த அவர்கள் அச்சப்பட்டு எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் என்னுடைய முதலாளியிடம் இது பற்றி கலந்து பேசி அலோனைக் கேட்டேன்.

அப்போது அவர், ‘ஒரு முறை சென்னையில் இருக்கும்போது இந்த தொழில் சார்ந்த ஒருவரை எதிர்பாராமல் சந்திக்க நேர்ந்தது. எப்போதாவது இவருடைய சேவை நமக்கு பயன்படலாம் என்று அவருடைய விஸ்டிங் கார்டை வாங்கினேன். இப்போது அது உங்களுக்கு பயன்படுகிறது’ என்று கூறி, காதிரிய்யா தெய்வீக மையத்தின் விலாசத்தையும் தொடர்பு எண்ணையும் கொடுத்தார்.

அதன் உரிமையாளர் ஐயா பரீத் அவர்களைத் தொடர்பு கொண்டு பேசினேன். இங்கு நடந்ததையும் விவரித்தேன். அப்போது அவர், என் பெயர், வயது என் அம்மாவின் பெயர் மற்றும் முகவரி ஆகியவற்றைக் கேட்டு விட்டு, ‘கொஞ்சம் நேரம் கழித்து நானே உங்களை மீண்டும் அழைக்கிறேன்’ என்று சொன்னார். அவ்விதமே சுமார் ஒரு மணி நேரம் கழித்து அவர் என்னை மொபைலில் அழைத்து விஷயத்தைக் கூறினார். ‘அதாவது, உங்களுக்கு உங்கள் குடும்பத்தில் உள்ளவர் யாரோ உங்கள் மீது பொறாமையின் காரணமாக இதை செய்துள்ளனர். இப்போது உங்கள் குடும்பத்தில் உள்ளவர் யாரேனும் ஒருவர் அதைத் தொட்டால் அதன் வீரியம்/சக்தி வெளிப்படும். பிறகு அதனால் மிகப்பெரிய பாதிப்பும் ஏற்படும். ஆகையால் நீங்கள் யாரும் அதைத் தொடக்கூடாது’ என்று கூறினார்.

‘பிறகு அதை அப்புறப் படுத்த என்னதான் வழி?’ என்று கேட்டேன். ‘வேறு யாரையாவது அதை அப்புறப் படுத்தச் சொல்லுங்கள்’ என்று கூறினார். ‘ஆனால், நிச்சயம் அது முடியாது, இதை துணிந்து செய்ய யாரும் முன் வர மாட்டார்கள். யாராக இருந்தாலும் பயப்படுவார்கள். எனவே, தயவசெய்து நீங்களே வந்து அதை அப்புறப் படுத்திக் கொடுங்கள்!’ என்று கேட்டுக்கொண்டேன். ‘ஆம். அதுவும் உண்மைதான்.  கொஞ்சம் யோசித்துப் பார்த்து விட்டு என்னால் வர முடியுமா முடியாத என்று சொல்கிறேன்’ என்று கூறிமுடித்தார். அடுத்தநாள் காலை அவரே எனக்கு போன் செய்து, ‘சரி நானே வருகிறேன்.’ என்று சம்மதம் திரிவித்து விட்டு சென்னையிலிருந்து பெங்களூருக்கு உடனே புறப்பட்டார்.

அவரை அழைத்து வர என் தந்தையை அனுப்பினேன். ‘அந்தப் பொருளை அப்புறப் படுத்தும் முன்பு நான் உங்கள் வீட்டிற்கு  வரக்கூடாது’ என்று கூறி விட்டு ‘என்னை அந்த காலி மனை இருக்கும் இடத்திற்கே முதலில் அழைத்துச் செல்லுங்கள்!’ என்று கூறினார். அவ்விதமே என் தந்தை அவரை அந்த இடத்திற்கு அழைத்து வந்ததும் அங்கிருந்த எல்லா வற்றையும் எடுத்து அவரே குப்பையில் போட்டுவிட்டார். அவற்றில் சிலவற்றை எரிக்கவும் செய்தார். பிறகு எங்கள் வீட்டிற்கு வந்து என் குடும்பத்திலுள்ள எல்லோரையும் சந்தித்தார். ‘

‘எனக்கு உடல் நிலை அவ்வப்போது பாதிக்கிறது’ என்று அவரிடம் கூறினேன். அவருக்கு நேராக என்னை அமரும் படி கூறினார். அவர் கையில் ஏதோ ஒரு வாசனைத் திரவியம் தடவி அதை என்னை நுகரச் சொன்னார். அவ்வளவு தான், எனக்கு மயக்கம் வந்தது. என் நிலை மாறியது. எனக்கு என்ன ஏற்பட்டது என்று தெரியவில்லை. பிறகு மயக்கம் தெளிந்ததும் என் அப்பா நடந்ததை எனக்குச் சொன்னார்.

அதாவது, என் மீது ஏதோ ஒரு ஏவல் சாத்தான் வந்து கன்னடத்தில் பேசியது, பரீத் ஐயா அவர்களுக்கு கன்னடம் தெரியாது  என்பதால் என் தந்தை தமிழில் மொழி பெயர்த்தார். அவர் கேட்க சொல்வதை எல்லாம் என் தந்தை கன்னடத்தில் அந்த ஏவலிடம் கேட்டார். அந்த ஏவல் கன்னடத்தில் சொல்வதை எல்லாம் என் தந்தை தமிழில் அவருக்குச் சொன்னார்.

எங்கள் மீதுள்ள அதீத பொறாமையினால் என் மைத்துனரின் மனைவி தான் அந்த ஏவலை எங்களுக்கு தீங்கு செய்ய, எங்களை நசமாக்க அனுப்பியுள்ளார் என்று அந்த ஏவல் மிகத் தெளிவாக எல்லா விசயங்களையும் சொல்லி விட்டது. உங்களை அழிக்காமல் போக மாட்டேன் என்று ஆவேசம் காட்டியது.

உண்மை என்னவெனில், கடவுள் ஒருவருக்கு உதவ வேண்டும் என்று நாடிவிட்டால் யார் மூலமும் எப்படியாகிலும் உதவுவார் என்பதற்கு சாட்சியாக ஐயா பரீத் எங்களுக்குகிடைத்தார். அவர் மூலம் முழு தீர்வையும் நிவாரணத்தை நாங்கள் எல்லோரும் பெற்றுக்கொண்டு இன்று நிம்மதியாக வாழ்கிறோம். இனி இதுமாதிரி எந்த கெட்டதும் எங்களை அண்டக்கூடாது என்று நல்ல பாதுகாப்பும் செய்து கொடுத்தார். ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறேன்.

உடல் ஆரோக்கியம் மற்றும் மன நிம்மதி ஆகிய இந்த இரண்டிற்கும் ஈடாக எந்த செல்வமும் இல்லை என்று இந்தப் பிரச்னைக்கு அப்பால் எங்களால் உணர முடிகிறது.

Sheela- Bangalore