என்னுடைய பெயர் ரம்யா வயது 23, சென்னை, கோட்டூரில் வசிக்கிறேன். சில தினங்களாக எனது வலது முன்கையில் ஒரு வகையான நடுக்கம் ஏற்பட்டது. கால போக்கில் அது அதிகமாகி விட்டது. நினைவிலும் தூக்கத்திலும் கை ஆடிக்கொண்டேயிருக்கும். இதை குணப்படுத்த பல மருத்துவர்களிடம் எனது பெற்றோர் என்னை அழைத்துச் சென்றனர். அவர்களின் ஆலோசனைபடி எல்லா வகையான பரிசோதனைகளும் செய்யப்பட்டது. ஆனால், பரிசோதனைகளில் இதற்கான காரணங்கள் எதுவும் தென்படவில்லை. பரிசோதனைகள் யாவும் இயல்பாகவே இருப்பதால் மருத்துவர்களும் செய்வதறியாது திகைத்தனர்.
நான் மணம் முடிக்கப்படாத பெண் என்பதால் இது என் பெற்றோருக்கு இரு மடங்கு மன உளைச்சலை ஏற்படுத்திவிட்டது. நாட்கள் செல்ல செல்ல எனக்கும் மன விரக்தி ஏற்பட்டு நிம்மதி போய்விட்டது. எல்லா நேரமும் கை நடுக்கம் இருப்பதால் பார்ப்பவர்களெல்லாம் இதுபற்றி கேட்க ஆரம்பித்து விட்டார்கள். அதுவே எனக்கு மிக பெரிய பாரமாக மாறிவிட்டது. அதனால் உறவினர்கள் முன்பும் நண்பர்கள் முன்பும் வர எனக்கு கஷ்டமாக இருந்தது. குறிப்பாக எந்த விசேஷங்களிலும் கலந்து கொள்ள மாட்டேன். இதனால் நாளுக்கு நாள் மன விரக்தி அதிகமாகி விட்டது. என் முகத்தில் புன்னகையை முற்றிலுமாக இழந்து விட்டேன். என் மீது யாரும் அனுதாபப்படக் கூடாது என்று நானே என்னை தனிமை படுத்திக் கொள்வேன்.
இப்படி வாழ்க்கையே பொருளற்று போனதாக உணர்ந்த நிலையில் தான் என் தம்பியின் நண்பன் தமீம் பரிந்துரையின் மூலம் காதிரிய்யா தெய்வீக மையத்தை நாடினோம். இது ஒரு ஆன்மிக சிகிச்சை மையம் என்று தெரிந்து கொண்டோம். மருந்து-மாத்திரைகள், மருத்துவ கருவிகள் ஏதுமின்றி சிகிச்சையளிக்கப்படும் என்று புரிந்து கொண்டோம். அதன் மாஸ்டர் ஹீலர் திரு. ஃபரீத் ஆலிம் என்னை பரிசோதிக்க என் கை பிடித்துப் பார்த்தார். என் பெயர், வயது மற்றும் அம்மாவின் பெயர் கேட்டார். சில நிமிடங்களுக்குப் பிறகு எனக்கு ஏதும் பிரச்னை இல்லை, மாறாக உங்கள் வீட்டில் தான் பிரச்னை உள்ளது என்பதால், நான் உங்கள் வீட்டிற்கு வர வேண்டும் என்று கூறினார். அப்போது என் பெற்றோர், ‘உங்கள் இடத்தில் இருந்தபடியே இந்த பிரச்னையை மட்டும் சரி செய்தால் போதும்’ என்று கேட்டுக் கொண்டனர். ‘ஆம்! முடியும். ஆனால், அது நிரந்தர தீர்வாகாது. இப்போது குணமடைந்தாலும் மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் கை நடுக்கம் ஏற்படும்’ என்று அவர் கூறினார். ஆனாலும் என் பெற்றோர், அதை ஏற்காமல் எனக்கு மட்டும் சிகிச்சையளிக்கும்படி கேட்டனர். வேறு வழியின்றி அவரும் அதை ஒப்புக் கொண்டு எனக்கு சிகிச்சையளித்தார்.
ஒரு வாரத்திலேயே என் கை நடுக்கம் முற்றிலும் சரியடைந்தது. இதை பார்த்து ஆச்சரியப்பட்ட என் பாட்டி, அவரை போனில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தார். அப்போது அவர் என் பாட்டியிடம் ‘இது நிரந்தர தீர்வல்ல மறுபடியும் ஏற்படும்’ என்று கூறினார். என் பாட்டியும் அதை பொருட்படுத்தவில்லை. அவர் சொன்னது போல் மூன்று மாதம் கழிந்ததும் மீண்டும் கை நடுக்கம் ஏற்பட்டது. அப்போது என் தந்தை அவரை போனில் தொடர்பு கொண்டு என் வீட்டிற்கு வரவழைத்தார். அவர் வீட்டிற்குள் வந்ததும் இங்கு ஒரு கெட்ட ஜின் (பூதம்) இருக்கிறது. அதை அப்புறப்படுத்த 45 நாட்கள் ஓதவேண்டும் என்றும் கூறினார். அதற்கு நாங்கள் சம்மதம் தெரிவித்ததும் அவர் பரிகார வேலையை தொடங்கினார். அதற்காக ஒரு நபரை பிரத்தியேகமாக நியமித்தார். 43 ஆம் நாள் இரவு அவர் எங்கள் வீட்டிற்கு வந்து சில விசேஷ பிரார்த்தனைகள் செய்து முடித்து, ‘இன்று இரவோடு உங்களின் எல்லா பிரச்னைகளும் தீர்ந்துவிடும். அந்த ஜின் வெளியேறிவிடும். அது வெளியேறுவதற்கு முன்பு உங்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு விட்டு வெளியேறும்.’ என்று கூறிவிட்டு எனக்கு ஒரு வெள்ளி தாயத்தை கொடுத்து என்னை அணியும் படி கூறினார். அத்துடன் நான்கு பித்தளை ஆணிகளை கொடுத்து எங்கள் மனையின் நாற்புற மூலைகளில் புதைத்து விடும்படி கூறினார்.
அன்று இரவு தூக்கத்தில், மிக பயங்கரமான ஒரு பெண் உருவத்தை நான் கனவில் கண்டேன். அது எங்கள் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் காலிலும் விழுந்து ‘நான் உங்களுக்கு பெரிய தொல்லை கொடுத்து விட்டேன்’ என்று கூறி மன்னிப்புக் கேட்டுவிட்டு எங்கள் மனையை விட்டும் வெளியேறி விட்டது. அன்று இரவோடு என் கை நடுக்கமும் முற்றிலுமாக சரியாகிவிட்டது. மறுநாள் காலை எங்கள் மனையின் எல்லையில் நாற்புற மூலைகளில் அவர் கொடுத்த ஆணியைப் புதைத்து விட்டோம்.
அடுத்த நாள் இரவு தூக்கத்தில், நேற்று வெளியேறிய அந்த பெண் உருவம் மறுபடியும் எங்கள் எல்லைக்குள் வர முயலும் போது எல்லையை சுற்றிலும் தீ எரிகிறது அதனால் அது உள்ளே நுழைய முடியவில்லை. மேலும் அது, என் கழுத்திலிருக்கும் தாயத்தை கழற்றும் படி கூறியது. அப்போது நான் விழித்துக்கொண்டேன். நான் கனவில் கண்ட அனைத்தையும் என் அம்மாவிடம் கூறினேன். நம் பிரச்னைகள் எல்லாம் சரியாகிவிட்டது என்று என் அம்மா ஆனந்த கண்ணீர் வடித்தார்.
நானும் என் குடும்பத்தாரும் வாழ்நாள் முழுக்க அவருக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். என் வாழ்க்கையை அவர் மீட்டுக் கொடுத்தார். இழந்த புன்னகையை அவர் மீட்டுக் கொடுத்தார். எனவே, “நன்றி” எனும் ஒரு வார்த்தையில் இதை நான் சுருக்க விரும்பவில்லை. என்னை பொருத்தவரையில் என்னைக் காப்பாற்ற வந்த “சக்திமான்” அவர் என்று தான் கூற வேண்டும்.
ரம்யா-கோட்டூர்.
Mobile: 9600127768