என்னுடைய பெயர் அப்துல் ஜலீல். நான் சென்னை பெரம்பூரில் வசிக்கிறேன்.

என் மகளின் பெயர் ருகைய்யா, வயது 28, இந்த ஆண்டு துவக்கத்தில் ஆட்டோவில் பயணிக்கும் போது திடீரென கதறினாள். ‘எனக்கு எல்லாம் தலைகீழாக தெரிகிறது. எனக்கு எல்லாம் தலைகீழாக தெரிகிறது’ என்று சொல்லி கூச்சலிட்டாள். அன்றைய தினமே அவள் நிலை மாறி கொஞ்சம் கொஞ்சமாக சுயநினைவையும் இழந்து விட்டாள். அவளுக்கு திருமணமாகி 5 வயதில் ஒரு பெண் குழந்தையும் இப்போது 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறாள்.

அவளுக்கு என்னவாயிற்று என்று தெரியாமல் நாங்கள் எல்லோரும் நிலைக் குலைந்து போய்விட்டோம். எப்படியாகிலும் அவள் சுகம் அடைந்து விடுவாள் என்று அவளை பல மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்றோம். ஆனால், அவளுக்கு என்ன தான் வியாதி, என்ன நடந்தது என்று மருத்துவர்களால் கண்டறிய முடியவில்லை. அவர்கள் ஏதேதோ காரணம் கூறி, அனைத்து வகையான மருத்துவ பரிசோதனைகளும் செய்ய சொன்னார்கள். அவர்கள் சொல்லும் எல்லா பரிசோதனைகளும் அவளுக்கு நடத்தப்பட்டது. ஆனால், எல்லா பரிசோதனையிலும் அவள் இயல்பாக தான் இருக்கிறாள், அவளுக்கு உடல் ரீதியாக எதுவும் குறையில்லை என்று பரிசோதனைகளில் தென்பட்டது.

ஆக, அவளுக்கு என்ன தான் ஏற்பட்டது என்று மருத்துவர்களுக்கும் புரியவில்லை எங்களுக்கும் புரியவில்லை. ‘நோயிக்கும் பார், பேயிக்கும் பார்’ என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். அதனால் எங்களுக்கு தெரிந்த மந்திரிக்கும் நபரிடம் அவளை அழைத்துச் சென்று ஓதி பார்த்தோம். அப்போது அவர், கஷ்மூரிலுள்ள (நெல்லூர், ஆந்திர மாநிலம்) காலேஷா மஸ்தான் பாபா தர்காவிற்கு அழைத்துச் செல்லுங்கள்!’ என்று கூறினார். அவ்விதமே நாங்கள் எல்லோரும் அவளை அழைத்துக் கொண்டு சென்றோம்.

அன்றிரவு கடுமையான மழை. மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருந்தது. திடீரென என் மகள் ஒரு விதமாக கத்தினாள். அப்போது அவள் வயிற்றில் இருந்த எட்டு மாத குழந்தை இறந்தே வெளியில் வந்தது. தனக்கு என்ன நடக்கிறது என்பதை அப்போதும் அவள் அறவே உணரவில்லை.

என்ன செய்வதறியாது நிலை குலைந்து நாங்கள் இருக்கும் போது, பக்கத்தில் இருந்தவர்கள் அவசர உதவி எண்ணில் தொடர்பு கொண்டு ஆம்புலன்ஸை வரவழைத்தார்கள். அவளை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கு அவளுக்கு அவசர சிகிச்சை உதவிகள் வழங்கப்பட்டன. இறந்த குழந்தையை அதே ஊரிலேயே அடக்கம் செய்தோம். நடப்பது என்ன என்று அவளுக்கு எதுவுமே தெரியாது. இந்த சூழ்நிலையிலும் நாங்கள் பொறுமையை இழக்கவில்லை. எங்கள் இறை நம்பிக்கையை விடவில்லை. வந்த இடத்தில் இப்படி ஆகிவிட்டதே என்று கைசேதப்பட்டோம். குழந்தை உயிர்தான்போய்விட்டது தாய் உயிரையாகிலும் காப்பாற்ற வேண்டும் என்று எண்ணி அப்போதே நாங்கள் புறப்பட்டு சென்னைக்கு திரும்பி விட்டோம்.

நாங்கள் வசிக்கும் பகுதியின் அருகில் ரஹ்மானியா ஜும்மா மஸ்ஜித் இருக்கிறது. அந்த பள்ளியின் முஅத்தின் ஹனீப் ஸாஹிப். அவர் எனக்கு நீண்ட நாள் பழக்கம் உள்ளவர். மிகவும் நெருக்கம் என்பதால் நடந்தவற்றை எல்லாம் அவரிடம் கூறினேன். அப்போதுதான் அவர், காதிரிய்யா தெய்வீக மையம் பற்றி என்னிடம் கூறினார். அதன் முகவரியைக் கொடுத்து, அதன் உரிமையாளர் ஃபரீத் ஹள்ரத் அவர்களைத் தொடர்பு கொண்டு பேசும் படி கூறினார். ‘கவலைப்பட வேண்டாம்! உங்கள் மகளை ஃபரீத் ஹள்ரத் அவர்கள் எப்படியும் குணப்படுத்தி விடுவார்கள்’ என்று ஆறுதல் கூறினார்கள்.

பிறகு, நான் ஹள்ரத் அவர்களிடம் போனில் நடந்தவற்றை விவரித்தேன். ‘உங்கள் மகளை என் இடத்திற்கு அழைத்து வர முடியுமா?’ என்று கேட்டார்கள். ‘அழைத்து வரும் நிலையில் அவள் இல்லை, ஆதலால், தாங்கள் நேரில் வந்து பார்த்தால் தான் நிலைமை என்னவென்று புரியும்.’ என்று கூறினேன். ‘சரி’ என்று சம்மதித்து அவர்களின் உதவியாளர்களில் ஒருவரை நோயாளியின் உண்மை நிலை என்னவென்று கண்டறிய என் வீட்டிற்கு அனுப்பிவைத்தார்கள். அவர் வந்து பார்த்து விட்டு ஹள்ரத் அவர்களுக்கு நோயாளியின் நிலைப் பற்றி விவரித்தார்.

பிறகு ஹள்ரத் அவர்களும் நேரில் வந்து என் மகளைப் பார்த்தார்கள். அப்போது என் மகள் எவ்வித அசைவும் இன்றி கிடந்தாள். அவளை அங்கிருந்த ஒரு சேரில் (இருக்கை) அவளைத் தூக்கி உட்காரவைக்கும்படி சொன்னார்கள். அவள் தன் பற்களை இறுக்கமாகக் கடித்துக் கொண்டிருந்தாள். கை முறுக்கிக் கொண்டும் கால்களை ஒன்றோடு ஒன்றுடன் பின்னிக்கொண்டும் இருந்தாள். அவள் வாயை திறக்கவைக்க ஹள்ரத் அவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை.

‘இந்த ஒரு உடலில் மூன்று ரூஹானிகள் உண்டு. அது ஒன்றுக்கு ஒன்று உதவி செய்துக்கொண்டு, ஒன்று மற்றொன்றை வெளியேற விடாமல் தடுக்கிறது. இந்தப் பெண் யாருக்கோ ஓதிப்பார்த்ததால் தான் இப்படி ஏற்பட்டிருக்கிறது. இவளுக்கு உடனே சிகிச்சை செய்ய வேண்டும். தாமதித்தால் உயிருக்கே ஆபத்து என்று கூறினார்கள்.

சிகிச்சைக்கு நான் சம்மதித்தேன். உடனே சிகிச்சை துவங்கப்பட்டது. இரண்டு நபர்கள் ஒவ்வொரு இரவும் எங்கள் வீட்டிற்கு வந்து அவள் இருக்கும் அறையில் கெளஸ் நாயகத்தின் பெயரில் தினமும் அகல் ஏற்றுவார்கள். மேலும் அவள் தலைமாட்டில் அமர்ந்து கொண்டு கெளஸ் நாயகத்தின் பெயரில் தினமும் குர்ஆன் ஓதுவார்கள். ஹள்ரத் அவர்கள் தினமும் காலையில் வந்து என் மகளுக்கு ஓதி பார்த்து விட்டு செல்வார்கள்.

இப்படியே ஒரு சில தினங்கள் கழிந்தன. பல நாட்களுக்குப் பிறகு என் மகள் என்னை அப்பா என்று அழைத்தாள். அவள் தானாக எழுந்து உட்கார முயற்சி செய்தாள். ஆனால் அப்போது அவளுக்கு போதுமான சக்தி இல்லாததால் அவளால் உட்கார முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பித்தாள், சாப்பிட ஆரம்பித்தாள், எழுந்து உட்கார ஆரம்பித்தாள், சுவற்றை பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள். அவளே தானாக கழிவறைக்கும் செல்ல ஆரம்பித்தாள்.

ஒரு நாள் அவள் அம்மாவிடம் தன்னை குளிக்க வைக்கும் படி சொன்னாள். தன்வயிற்றில் இருக்கும் குழந்தையை இழந்து விட்டோம் என்று தெரியாமல் ‘நான் ஒரு புள்ளதாச்சி’ ‘நான் ஒரு புள்ளதாச்சி’ என்று அவ்வப்போது சொல்லுவாள். ‘அவள் முற்றிலுமாக இயல்பு நிலைக்கு திரும்பிய பின் நடந்தவற்றையெல்லாம் சொல்லலாம்’ என்று நாங்கள் முடிவு செய்திருந்தோம்.

ஒவ்வொரு நாளும் அவளுக்கு ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஹள்ரத்திடம் நான் சொல்லிக் கொண்டே இருப்பேன். அவளிடம் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்றார் போல் ஹள்ரத் அவர்களும் அடுத்தடுத்த நிலைக்கு சிகிச்சையை கொண்டு சென்றார்கள்.

சுமார் ஐந்து வாரங்களில் என் மகள் இயல்பு நிலைக்குத் திரும்பினாள். வாரம் ஒரு முறை தான் இடத்திற்கு அவளை அழைத்து வரவேண்டும் என்று ஹள்ரத் கூறினார்கள். அதையும் முறையாக செய்தோம். இப்போது எல்லாம் சரியாகிவிட்டது. ஆனால் அதிகம் கோபப்படுகிறாள். இது பற்றி ஹல்ராத்திடம் கேட்டதற்கு தன் குழந்தையை காப்பாற்ற முடியவில்லையே, தன்னால் தான் அந்த குழந்தை இறந்துவிட்டது என்ற விரக்தியில் இப்படி நடந்து கொள்கிறாள். அதுவும் காலப்போக்கில் சரியாகிவிடும் என்று கூறினார்கள்.

என் மகளை இப்படி ஒரு நிலைக்கு மீட்டெடுக்க ஹள்ரத் எடுத்துக்கொண்ட முயற்சி அளப்பெரியது. இதற்காக ஐந்து ஆலிம்கள் கொண்ட ஒரு குழுவையே நியமித்தார்கள். இப்படியொரு சிகிச்சை முறையை என் வாழ்நாளில் கண்டதில்லை. என் உயிர் இருக்கும் வரை அவர்கள் செய்த இந்த சாதனைச் செயலை மறக்கவே மாட்டேன். உண்மையில் காதிரிய்யா தெய்வீக மையம் என்னைப்போன்று பாதிக்கப்பட்டவர்களுக்கான ஒரு சிறந்த புகலிடம் என்று தான் கூற வேண்டும்.

என்றும் நன்றியுடன்

அப்துல் ஜலீல்- பெரம்பூர்

Mobile: 8124556055 & 9444164726