என்னுடைய பெயர் Godwin, வயது 36, நான் சென்னை, அயனாவரத்தில் வசிக்கிறேன். சென்னையிலுள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் Attainder ஆக பணிபுரிகிறேன். ஒரு நாள் எனக்கு மிகக் கடினமான வயிற்று வலி ஏற்பட்டு அவதி பட்டேன். மருத்துவ மனைக்கு சென்று சிகிச்சை செய்தும் பயனில்லை என்பதால், எங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள மசூதிக்கு சென்று மந்திரித்து விட்டு வரலாம் என்று அதிகாலையில் புறப்பட்டுச் சென்றேன்.
அங்கு எல்லோரும் தொழுகை முடித்து வெளியேறும்போது என்னைப் போன்று பலருக்கு ஓதி ஊதி விட்டுச் சென்றனர். அப்போது தான் நான் இவரை முதல்முறையாகப் பார்த்தேன். அங்கு வரிசையில் நின்று கொண்டிருந்த எல்லோரையும் ஒரு பார்வை பார்த்துக்கொண்டே அவர் என்னிடம் வந்தார். ‘என்ன பிரச்னை உங்களுக்கு’ என்று கேட்டார். உண்மையில் அந்த வார்த்தையில் அக்கறையும் அன்பும் கலந்து இருந்ததை நான் உணர்ந்தேன். ‘எனக்கு வயிற்று வலி’ என்று கூறினேன். ஒரு நிமிடம் என்னை உற்று நோக்கி விட்டு, ‘உங்களுக்கு சூனியம் செய்யப்பட்டுள்ளது’ என்று சொன்னார். சூனியமா?! என்று ஆச்சரியத்துடன் கேட்டு விட்டு, ‘இல்லை, அப்படி எதுவும் இருக்க வாய்ப்பில்லை’ என்று மறுத்து விட்டேன். எனக்கு அதில் நம்பிக்கை இல்லை என்பதை உணர்ந்த அவர், ‘இல்லை; உங்களுக்கு சூனியம் தான் செய்யப்பட்டுள்ளது. உங்களுடன் பணி புரியும் ஒரு பெண் தான் இதை செய்துள்ளார். நீங்கள் பணிக்கு வருவதை அவள் தடுக்கிறாள். அவள் உங்களுக்கு ஏதோ சாப்பிட கொடுத்துள்ளதாக தெரிகிறது.’ என்று சொல்லி விட்டு, அவர் என் வீட்டிற்கு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
சில மணி நேரங்களுக்குப் பிறகு அவர் எங்கள் வீட்டிற்கு வந்தார். ஒரு டம்ளரில் சிறிதளவு தண்ணீர் கொண்டு வரச் சொன்னார். அந்த தண்ணீரில் மந்திரித்து எனக்கு குடிக்க கொடுத்தார். அந்த தண்ணீரைக் குடித்த சில நொடிகளில் என் அடிவயிற்றிலிருந்து ஏதோ வருவது மாதிரி உணர்ந்ததை அவரிடம் கூறினேன். அவர், ஒரு அகலமான பாத்திரத்தை கொண்டு வரச் சொன்னார். 12 லிட்டர் கேன் தண்ணீரை எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக டம்ளரில் ஊற்றி ஊற்றி குடிக்க கொடுத்தார். நான் அதைக் குடிப்பேன்; அந்த பாத்திரத்தில் வாந்தி எடுப்பேன். இப்படி செய்துகொண்டிருக்கும்போதே என் அடி வயிற்றில் இருந்த அந்தப் பொருள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறியது. அது இறுதியில் முழுமையாக வெளியில் வந்தது. ஆம், என்னைப் பார்த்ததும் அவர் சொன்னது எல்லாம் உண்மை. என் வயிற்றிலிருந்து வந்தது ஒரு மெதுவடை. அது அடையாளம் தெரியாத அளவு கருப்பாக இருந்தது.
என்னுடன் பணி புரியும் ஒரு பெண் தான் அந்த மெது வடையை எனக்கு சாப்பிடக் கொடுத்தாள். அதில் இவ்வளவு பெரிய விபரீதம் இருக்கும் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. நான் அங்கு பணி செய்வது அவளுக்கு பிடிக்காது. ஏனெனில், அங்கிருப்பவர்களுக்கு அவளை விட என்னை தான் ரொம்ப பிடிக்கும். அதனால் அவளை விட வருமானமும் எனக்குத் தான் அதிகம். இந்தப் பொறாமையினால் அவள் சூனியம் வரை போவாள் என்று நான் எதிர் பார்க்க வில்லை. “தலைக்கு வந்த கத்தி தலைப்பாகையுடன்” போனது என்பது மாதிரி தான் நானும் தப்பித்தேன்.
ஒருவரைப் பார்த்ததும் உனக்கு இதுதான் பிரச்னை என்று சொல்லும் பேராற்றல் கடவுளின் அதீத அருள் இல்லாத யாராலும் முடியாது என்பது உறுதி. அந்த அருள் பெற்ற இவரின் அருள் பார்வை என் மீது பட்டதால் நான் தப்பித்தேன். இல்லையெனில் நான் எப்படியெல்லாம் அவதிப் பட்டிருப்பேன், அலைக்கழிக்கப்பட்டிருப்பேன் என்று யோசித்தாலே பயமாக இருக்கிறது. ஆக, என் வாழ்கையில் என்னை கரை சேர்த்த கலங்கரை விளக்கம் அவர். என்னைப் போன்று பாதிக்கப்பட்ட பலர் இவரின் சேவையைப் பயன் படுத்தி தங்களின் பிரச்னைகளுக்கான தீர்வைத் தேட தான் இந்த பதிவு.
Godwin- அயனாவரம், சென்னை
Mobile: 9952043024