என்னுடைய பெயர் கம்ருத்தீன் வயது 49, சென்னை, கொடுங்கையூரில் வசிக்கிறேன். மிலிட்ரியில் டிரைவராக பணிபுரியும் நான், கூடுதல் தொழிலாக ‘ரியல் எஸ்டேட்’ ஆரம்பித்தேன். அதன் துவக்கமாக மணலி மாத்தூரில் மூன்று வீடுகள் கட்டினேன். ஆனால், ஒரு வீடும் விற்பனை ஆகாமல் அப்படியே நின்று விட்டது. போட்ட பணத்தை எடுக்க முடியாமலும், வேறு கட்டிடம் கட்ட முடியாமலும் கடன் காரர்களுக்கு பதில் சொல்ல முடியாத நிலையிலும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டேன்.
தற்செயலாக ஹசன் மரைக்காயர் என்ற பெரியவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் ஒரு நல்லடியார் என்பதால் அவரிடம் எனது நிலையை விவரித்து, ‘இஸ்லாமிய மாந்தீரகத்தில் தேர்ச்சியான ஆள் யாரேனும் இருந்தால் சொல்லுங்கள்’ என்று கேட்டுக்கொண்டேன். அப்போது அவர், ‘உங்கள் நிலையைப் பார்த்தால் எனக்கு மிகவும் வேதனையாக உள்ளது. எனக்குத் தெரிந்து இந்த துறையில் தேர்ச்சி பெற்ற நபர் ஒருவர் உள்ளார். ஆனால், இப்போது அவர் இந்தப் பணி செய்யவில்லை. அவருக்குப் பதிலாக அவருடைய மகனார் பார்க்கிறார். நீங்கள் விரும்பினால் அவரிடம் உங்களை அழைத்துச் செல்கிறேன்.’ என்று கூறினார். அப்போது நான் இருந்த நிலையில் யோசிக்க நேரம் இல்லை என்று அல்லாஹ்விடம் பாரத்தை போட்டு விட்டு ‘சரி, அவரைச் சந்திக்கலாம்’ என்று சொல்லி இருவரும் அவர் இருக்கும் அயனாவரத்திற்கு புறப்பட்டுச் சென்றோம்.
நாங்கள் சந்திக்கச் சென்ற அவரின் பெயர்; ஃபரீதுத்தீன் ஆலிம். மார்க்கக் கல்வியில் மிகவும் தேர்ச்சி பெற்றவர் என்று தெரிந்து கொண்டேன். அதனால் நான் ஒரு தவறான இடத்திற்கு வரவில்லை என்று எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கொண்டேன். ஏனெனில், எல்லா துறையிலும் 80% உண்மை இருக்கும் 20% போலி இருக்கும். ஆனால், இந்த மாந்திரீக தொழிலில் மட்டும் 80% போலியும் 20% உண்மையும் இருக்கும் என்பது எனது அனுபவ அறிவு, மேலும் அதுதான் உண்மை.
நாங்கள் ஹள்ரத் அவர்களைச் சந்திக்க போனபோது அது காலை நேரம். அப்போது அவர்கள் தனது மஹல்லா பிள்ளைகளுக்கு குர்ஆன் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். எங்களை சிறிது நேரம் காத்திருக்கும் படி சொன்னார்கள். பிள்ளைகள் எல்லோரும் பாடம் முடித்து விட்டுச் சென்ற பிறகு எங்களை அழைத்து விஷயத்தைக் கேட்டார்கள். ‘கவலைப் பட வேண்டாம், சரி செய்து விடலாம்’ என்று சொன்னார்கள். அப்போது நான் அவர்களிடம், ‘தங்களுக்கு கொடுக்க பணம் எதுவும் என்னிடம் இல்லை, நான் கட்டிய வீடுகளை விற்றால் தான் உங்களுக்கும் பணம் கொடுக்க முடியும்’ என்று கூறினேன். ‘அதற்கென்ன பரவாயில்லை’ என்று பணம் பற்றி சற்றும் பொருட்படுத்தாமல் அவர்கள் சொன்ன பதில் எனக்கு மிகவும் ஆச்சரியமாகவே இருந்தது.
அதன்பின் ஒரு நாள் இரவு, 10மணிக்குமேல் தன்னுடன் இரண்டு ஆலிம்களை அழைத்துக் கொண்டு மணலி மாத்தூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள அந்த வீட்டிற்கு வந்தார்கள். அவர்கள் அந்த வீட்டில், சுமார் மூன்று மணி நேரம் ஓதினார்கள். பிறகு நன்கு துஆ செய்து விட்டு அந்த வீட்டில் கட்டித் தொங்க விடும் படி ஓர் காகிதத்தை கொடுத்தார்கள். ‘ஓரிரு மாதங்களுக்குள் விற்பனை ஆகிவிடும், கவலைப்பட வேண்டாம்!’ என்று ஆறுதல் கூறிவிட்டு சென்றனர்.
அல்ஹம்து லில்லாஹ்! மிகவும் சீக்கிரமாகவே வீடுகள் எல்லாம் விற்பனை ஆகிவிட்டது. பிறகு ஒரு நாள் அவர்களைச் சென்று சந்தித்து அவர்களுக்குத் தர வேண்டும் என்று நானாக முடிவு செய்த தொகையைக் கொடுத்து விட்டேன். அப்போது ஹள்ரத் அவர்கள், ‘காரியம் முடிந்தவுடன் எல்லோரும் போல் நீங்களும் மறந்து விடுவீர்கள்’ என்று நினைத்தேன். ஆனால், தாங்கள் சற்று வித்தியாசமானவராக இருக்கிறீர்கள்’ என்று புன்முறுவலுடன் கூறிவிட்டு, ‘இனி நீங்கள் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்யக் கூடாது, அதற்குப் பதிலாக இரும்பு சம்பந்தப்பட்ட ஏதேனும் ஒரு தொழிலை செய்யுங்கள்! அல்லாஹ் பரகத் செய்வான்!’ என்று கூறி அனுப்பினார்கள். அவர்கள் கூறியது போல், ரியல் எஸ்டேட் தொழிலை விட்டு விட்டு சைக்கிள் கடை ஆரம்பித்தேன். அதில் வெற்றியும் கிடைத்தது. அல்ஹம்து லில்லாஹ்!
என்னைப் போன்று யார்யார் எல்லாம் சிரமப் படுகிறார்களோ அவர்கள் எல்லோரையும் ஹள்ரத் அவர்களிடம் தான் அனுப்பி வைப்பேன். இது வரை யாருடைய காரியமும் வெற்றியடையாமல் போனது இல்லை. குறிப்பாக, அவர்கள் யாருக்கும் எந்த கெட்ட வேலைகளையும் செய்துத் தர மாட்டார்கள். நல்ல காரியங்களுக்காக மட்டும் நீங்கள் அவர்களை நாடி நம்பி போகலாம். நிச்சயம் வெற்றி அடைவீர்!
எல். கம்ருத்தீன்- கொடுங்கையூர்
Mobile: 9444248197