உங்கள் புன்னகை எங்கள் விருப்பம்!

எமது சுருக்கமான சுயசரிதை

அடியேன் மௌலவி, A. R. ஃபரீதுத்தீன் ஆலிம் மஹ்ளரி M. A. ஆகிய நான் காதிரிய்யா தெய்வீக மையத்தின் உரிமையாளர் ஆவேன்.

இஸ்லாமிய ஆய்வுகளுக்கான பாதை

எமது பதினாறாம் வயதில் பள்ளிப்படிப்பை முடித்ததும் இஸ்லாமிய மதகுருமார்களுக்குரிய ‘மௌலவி ஆலிம்’ ஏழு ஆண்டு காலப் பட்டயப் படிப்பை தொடர்ந்தேன். அதன் ஆரம்பமாக 1992 ஆம் ஆண்டில் சென்னை சைதாபேட்டையில் அப்போதிருந்த ஹிஸ்புல்லாஹ் அரபிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்தேன். அதைத்தொடர்ந்து வேலூரிலுள்ள அல்-பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் பயின்றேன்.

பிறகு, சென்னை ஜமாலியா அரபிக் கல்லூரியில் மூன்று ஆண்டுகள் பயின்று இறுதியாக 1998 ஆம் ஆண்டு காயல்பட்டினத்திலுள்ள மஹ்ளறதுல் காதிரிய்யா அரபிக் கல்லூரியில் ஏழாம் ஆண்டு பயின்று அங்கேயே ‘மௌலவி ஆலிம்’ பட்டமும் பெற்றேன். அதற்குப் பிறகு சென்னைப் பல்கலைக்கழத்தில் அரபு மொழி இயல் துறையில் இளங்கலைப் பட்டமும் சென்னை புதுக் கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் முதுகலைப் பட்டமும் பெற்றேன்

ஏன் காதிரிய்யா தெய்வீக மையம்

காதிரிய்யா தெய்வீக மையம் 1963 ஆம் ஆண்டில் எமது அன்புக்குரிய தந்தை மறைந்த மௌலானா, எம். அப்துர் ரஷீத் ரஹ்மானி காதிரி அவர்களால் நிறுவப்பட்டது. மேலும் எமது தந்தை அவர்கள், பொது மக்களிடையே “பம்மல் ஹஸ்ரத் & பர்மா ஹஸ்ரத்” என்று பிரபலமாக அறியப்பட்டவர் ஆவர்.

அவர் ஒரு புகழ்பெற்ற இஸ்லாமிய ஆன்மீக சிகிச்சை நிபுணர், எண்ணற்ற நோயாளிகளுக்கு மருந்து இல்லாமல் தனது ஆன்மீக சிகிச்சை முறைகள் மூலம் சிகிச்சையளித்தார். பல நபர்களுக்கு மன ரீதியான மற்றும் உடல் ரீதியான பல்வேறு பிரச்சினைகளை சமாளிக்க ஆலோசனை வழங்கினார். அவர் தனது இறுதி மூச்சு வரை எண்ணற்ற நோயாளிகளுக்கு சேவை செய்தார்.

என் தந்தையின் சேவை நின்று விடக்கூடாது என்ற உயர்ந்த எண்ணத்தில் அவர்களின் ஆன்மீக வழிகாட்டுதலுடன் ஆன்மீக சிகிச்சை முறைகளின் அனைத்துப் பகுதிகளையும் நான் கற்றுக் கொண்டேன். எமது தந்தையிடமிருந்து ஆன்மீக சிகிச்சைமுறை துறையில் மிகச்சரியான அறிவைப் பெற்ற பிறகு, 1998 முதல் சாதி, மதம் பொருட்படுத்தாமல் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு சேவை செய்ய அதே பயிற்சியை இன்று வரை மேற்கொள்கிறேன். மனிதகுலத்திற்கு என்னால் முடிந்த சேவையை வழங்கி வருகிறேன்.

சூனியம், கண்ணேறு, பிரேத ஆத்மா தொந்தரவு, மனச்சோர்வு, மனக் கோளாறு, தற்கொலை எண்ணங்கள், அனைத்து வகையான புற்றுநோய், மாரடைப்பு, மார்பு வலி, முதுகுவலி, மூட்டு வலி, தோல் எரிச்சல், அரிப்பு, அஜீரணம், முகப்பருக்கள், தூக்கமின்மை, அடிக்கடி தலைவலி, மருத்துவரின் சிகிச்சையால் குணப்படுத்தப்படாத நாள்பட்ட வியாதி, குழந்தையின்மை, ஒழுங்கற்ற மாதவிடாய், இயலாமை எண்ணம் அதிகரிப்பு, நினைவாற்றல் இழப்பு, வியாபாரத்தில் தொடர் நட்டம், வணிக வளர்ச்சியில் தடை, வெளிநாட்டுப் பயண முயற்சியில் தொடர் தோல்வி, திருமணத் தடை, குழந்தைகள் / மாமியார் அட்டூழியம், அராஜகம், கணவன்/மனைவி இருவருக்கிடையில் எப்போதும் சண்டை – சச்சரவு, கணவன்/ மனைவிக்கு மத்தியில் சந்தேகம், அதனால் ஏற்படும் மனக்கசப்புகள், கணவன்/ மனைவி சட்டவிரோத கள்ள உறவு இன்னும் இதுபோன்ற எண்ணற்ற பிரச்சினைகளுக்கான தீர்வை திருக்குர்ஆன் வசனங்கள், அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் ஆகியவற்றோடு எமது முன்னோர்கள் காண்பித்த இணையற்ற வழிகாட்டளுடன், இந்த துறை சார்ந்த புராதானமான அரபு மொழி நூல்களின் மேற்கோள்களுடன் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டும் மிக அற்புதமான தீர்வை வழங்க முடியும். சவால்!

இது நமது சிகிச்சை முறை

ஆன்மிக சிகிச்சை முறையில் பல வகை உள்ளன என்பதை அறிந்திருப்பீர்கள். அந்த வகையில், இறை வசனங்கள், அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களின் மூலம் பிரதிபலிக்கும் ‘முஅக்கலாத்’ எனப்படும் தெய்வத் தூதர்கள் மற்றும் துஆ எனப்படும் பிரார்த்தனை ஆகியவற்றோடு நமது முன்னோர்களின் ஒப்பற்ற வழிகாட்டுதல்களையும் மூலதனமாகக் கொண்டு மட்டுமே அனைத்து வகையான பிரச்சினைகளுக்கும் தீர்வை வழங்கி வருகிறோம். இதற்கு மாறாக நம் அடிப்படை சித்தாந்தத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் ஜின், ஷைத்தான், ஆவி போன்றவற்றின் உதவிகளை ஒருபோதும் நாம் பயன்படுத்துவது இல்லை.

கொள்கை மற்றும் நெறிமுறை

நாங்கள் சுன்னி முஸ்லிம்கள், அல்லாஹ்வை மட்டுமே வணங்குகிறோம், அல்லாஹ்வின் கடைசி தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுகிறோம், மேலும் அல்லாஹ்வின் அனைத்து தூதர்களையும் தீர்க்கதரிசிகளையும் நம்பிக்கைக் கொள்கிறோம். அவ்லியாவை (அல்லாஹ்வின் நண்பர்கள்) நேசிக்கிறோம். ஹனஃபி, ஷாஃபி, ஹம்பளி மற்றும் மாலிகி ஆகிய நான்கு இமாம்களால் வடிவமைக்கப்பட்ட இஸ்லாத்தின் கொள்கைகளை நாங்கள் ஏற்றுக்கொண்டு பின்பற்றி வருகிறோம். இதற்கு முரணாக உள்ள வஹாபிகள் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானவர்கள் என்று தீர்மானிக்கிறோம்.

அறிவும் அனுபவமும் நம் தனித்துவம்

“மௌலவி ஆலிம்” பட்டமும் சென்னைப் பல்களைக்கழகத்தில் “அரபு மொழியியல்” துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றிருப்பதால் அரபி, ஆங்கிலம், உருது, பார்ஸி மற்றும் நம் தாய் மொழியாம் தமிழ் ஆகிய மொழிகளில் போதிய அளவு புலமை உண்டு. இம்மொழிகளில் அமைந்துள்ள இக்கலைக் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, புராதான நூல்களில் விவரிக்கப்பட்டுள்ள செய்முறைகளைப் பயன்படுத்தி, பண்ணூற்றுக்கணக்கான பிரச்சினைகளுக்கு இறைவன் அருளால் தீர்வு கண்டுள்ளோம். பொதுவாக இத்துறையில் கல்வி அறிவு பெற்றவர்களைக் காண்பது அரிது. அதிலும் இது போன்ற உயர் கல்வி மற்றும் அனுபவத்தைப் பெற்றவரைப் பார்ப்பது அரிதிலும் அரிது என்பது நம் தனித்துவங்களில் பிரதானமானது.

பிணி தீர்க்கும் வரை சிறப்பு கண்காணிப்பு

மருத்துவர்களால் கைவிடப்பட்ட நாள்பட்ட வியாதி எதுவாகிலும் குணப்படுத்த முடியும் என்பது சவால். ஆரம்ப நிலையிலுள்ள புற்றுநோய்கள் குறிப்பாக மார்பகப் புற்றுநோய், தோல் புற்றுநோய், தொண்டைப் புற்றுநோய் போன்றவற்றை எவ்வித வேதிப்பொருளின் துணையின்றி குணப்படுத்தி வெற்றிக் கண்டுள்ளோம். நோயாளிகள் தங்களின் வியாதி முற்றாக குணம் அடையும் வரை அவர்களைக் கண்காணிப்பதற்காக சிறப்புக் குழு அமைக்கப்படும். அக்குழுவினர் நோயாளியை காலை, மாலை இரு வேளையும் நேரில் சந்தித்து அவர்களின் உடல் நலம் முன்னேற்றம் எப்படி இருக்கிறது என்று கண்டறிந்து அதற்கு ஏற்றார் போல் அடுத்தடுத்து செய்ய வேண்டிய ஆன்மிக நோய்நிவரானப் பணிகளை உற்சாகத்துடன் செய்து வருவர்.

காரணத்தை மிகத் துல்லியமாக அறிதல்

சூனியம்-செய்வினை, ஜின் – ஷைத்தான், ரூஹானி-பேய் பிசாசு போன்ற அனைத்து வகையான பிரச்சினைகளுக்கும் காரணத்தை துல்லியமாகக் கண்டறிந்து மிகச் சரியான முறையில் தீர்வு வழங்கப்படும். அதேசமயம் பிரச்சனைகளுக்கான தீர்வை நாடி நம்மிடம் வரும் எல்லோரும் சாத்தான், செய்வினை போன்ற அமானுஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள்தான் என்று கூறிவிட முடியாது. மாறாக, அது அல்லாத வேறு காரணங்களாலும் அவதிப்படலாம். காரணம் எதுவாக இருப்பினும் அதை துள்ளியமாகக் கண்டறிந்து தீர்வு வழங்கப்படும். ஒருவேளை அதற்கான தீர்வு நம்மிடம் இல்லை எனும் போது மாற்றுவழி என்னவென்று மனிதநேயத்தோடு ஆலோசனை வழங்கப்படும்.

வெற்றிக்குப்பின் இருக்கும் இரகசியம்

இவன் படித்தவன், அவன் பாமரன், இவன் ஏழை, அவன் பணக்காரன், இவன் தெரிந்தவன், அவன் தெரியாதவன் போன்ற மனிதநேயமற்ற பண்புகளைக் களைந்து நம்மிடம் பாரபட்சமின்றி எல்லோருக்கும் ஒரே மாதிரியான கருணை, கவனிப்பு. யாரும் எப்பொழுதும் தொடர்பு கொண்டு மனம் திறந்து பேசலாம். நேரில் சந்திக்கலாம். அவர்களின் பிரச்னைகளுக்கான தீர்வைப் பற்றியே சிந்திப்பதும், அதற்கான விடியலைத் தேடி தருவதும், அதற்காக கால நேரம் பாராமல் கடினமாக உழைப்பதும், பாதிக்கப்பட்டவர்களும் துன்பத்தில் சிக்கியவர்களும் “இவர் நமக்கானவர்” என்ற நம்பிக்கையை அவர்களின் உள்ளங்களில் விதைப்பதும் தான் நம் வெற்றிக்கான இரகசியம்.

எளிமை, இனிமை அதுவே நம் மகிமை

பொதுவாக இத்துறையைச் சார்ந்தவர்கள், இதையே தங்களின் வாழ்வாதாரமாகக் கொண்டவர்கள், தங்களுக்கென்று ஒரு தனிப்பட்ட அடையாளத்தைப் பெற்றிருப்பார்கள். அது அவர்களுக்கான நடமாடும் விளம்பரப் பலகையாக வெளிப்படும். அதனால் அவர்களைப் பார்த்தவுடனே அவர்களின் பால் நெருங்கவிடாமல் சிலருக்கு ஒரு வகையான ஒவ்வாமையும், வேறு சிலருக்கு அச்சத்தையும் உண்டாக்கும். இவ்விசயத்தில் முற்றிலுமாக மாறுபட்டு எவ்வித ஒப்பனைகளும் அலங்கார அலட்டலுமின்றி மிகவும் எளிமையான, இயல்பான தோற்றத்துடன் சந்திக்கும் எல்லோரிடமும் இனிமையாகப் பழகும் பழக்கமே நமது தனித்துவங்களில் வெள்ளிடை மலை போல் வெளிப்படுகிறது.

மனித உயிர்க் காக்கும் ஆலோசனைகள்

கவலைப்பட வேண்டாம்! நாங்கள் இருக்கிறோம்! இனி எல்லாம் சரியாகிவிடும்!” போன்ற ஆரோக்கியமான சொற்கள் தான் மனித உயிர்க் காக்கும் ‘முதலுதவி’ என்று நம்மில் எத்தனை பேர் அறிவர்! “வெறுமனே நஞ்சு வார்த்தைகளால் பிறர் மனதை துன்புறுத்த முடியுமெனில் நல் வார்த்தைகளால் பிறர் வலியை போக்க முடியாதா?” என்கிறது ஒரு ஜென் தத்துவம். மந்திரம், மருந்து மாத்திரைகளைத் தாண்டி நல் ஆலோசனைகளுக்கு மிகப் பெரிய வலிமையுண்டு என்பதை நம்மிடம் பேசும் போதே அவர்களின் பிரச்னைகளுக்கான தீர்வு கிடைத்தது போல் உணருவர். எனவே, ஆலோசனைகள் மருந்தல்ல அவை நம் உள்ளத்திற்கான விருந்தாகும்.

மானுடம் வளர்ப்போம்! மனித உயிர்க் காப்போம்!

மனிதத்தை சீர்குலைப்பதில் மிக முக்கிய காரணிகளான சாதி, மதம், இனம் போன்றவற்றைக் கடந்து ‘மனித உயிர் எல்லோருக்கும் பொதுவானது, ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்ற சமத்துவச் சிந்தனையை மட்டுமே மையமாகக் கொண்டு அரை நூற்றாண்டைக் கடந்து, பாரம்பரியமாக சேவை செய்து வருகிறோம். இவ்வாறு நாம் கடந்து வந்த நாட்களில் நமது சேவையைப் பயன்படுத்தியவர்களில் பெரும்பாலோர் ” இவர் நேர்த்தியானவர், உண்மையானவர், நம் ரகசியங்களை பாதுகாப்பதில் நம்பிக்கைக்குரியவர், ” என்பன போன்ற நற்சான்றுகளைத் தவிர சொத்து, செல்வம், சேகரம் போன்ற எதையும் இந்த சேவையின் மூலம் சம்பாதிக்கவில்லை. அதற்கான வழியும் இதுவல்ல என்பதே நம் கோட்பாடு. அதுவே இன்றளவும் நம் நிலைப்பாடு.